யாழ். தொண்டமானாறு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது!
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் நிர்மாணிக்கப் பட்ட புதிய பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தை நிர்மாணிப்பதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சு 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இப்பாலம் முற்றாக சேதமாக் கப்பட்டது. பின்னர் தற்காலிக இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்திற்கான வதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
வடக்கின் வசந்ததம் திட்டத்தின் கீழ் யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையில் 129 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டதாக இப்புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டது, பாலத்தை திறந்து வைக்கும் வைபவம் நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தலை மையில் இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட அதிகர்ரிக்ள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இதே நேரம் மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் வடமாகாண சபையினால் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது. வட மாகாண சபை இதற்கென 24 மில்லியன் செலவிடப் பட்டுள்ளது.
யாழ் பழைய பூங்கா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்காவை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி திறந்து வைத்தார். மாகாண பிரதம செயலாளர் ரமேஷ் விஜலெட்சுமி யாழ் மாநகர முதல் யோகேஸ்வரி பற்குணராசா, ஆளுநரின் செயலாளர் இலங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment