காவி உடையில் சென்று கொள்ளை, மோப்ப நாய் பிடித்தது போலித்துறவியை..
பௌத்த துறவி போல வேடமணிந்த ஒருவரும், இரத்தினபுரி சுகாதார அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று இரத்தினபுரி புதிய நகரத்துக்கு அண்மையில் உள்ள கெட்டலியும்பல்ல என்ற பகுதியில் ஒரு வீட்டில் அலுமாரியை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
முறைப்பாடு கிடைத்த உடனேயே செயல்பட்ட இரத்தினபுரி பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவு மோப்ப நாயான ‘கனா’வின் உதவியுடன் சென்று திருடர் இருவரையும் கைது செய்ததோடு திருடப்பட்ட நகைகளையும், பணத்தையும் அவர்களிட்ம் இருந்து மீட்டுள்ளனர். மோப்ப நாய் கனா போலித்துறவி வசித்த இடத்துக்கு 200 மீற்றர் தூரம் வரை பொலிசாரை இட்டுச் சென்’றுள்ளது. அங்கு போலித் துறவி தனது காவியுடைக்குள் திருடிய 5,81000/- ரூபாவை மறைத்து வைத்திருந்துள்ளார்.
0 comments :
Post a Comment