Thursday, September 26, 2013

கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப்பாதை விரைவில் பாவனைக்கு!

கடல் மணலை பயன்படுத்தி இயற்கையான சூழலுடன் இலங்கையில் அமைக்கப்படுகின்ற இரண்டாவது அதிவேக போக்குவரத்து பாதையான கொழும்பு கட்டுநாயக்க அதிவேக போக்குவரத்து பாதை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

இதனால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு வருகைத்தரும் பல நாட்டின் தலைவர்கள் இந்த வீதியை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதனால் இதனை பயன்படுத்தி கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை வந்தடைய 20 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

350 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சீனாவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்த அதிவேக வீதி அமைக்கப்பட்டிருப்பதுடன் 25.8 கிலோ மீற்றர் நீளமுடைய இந்த அதிவேக வீதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வீதி சமிக்ஞைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் நாட்டில் உல்லாசப்பிரயாணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிவேக வீதி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com