இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி!
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாடசாலை மாணவர்களும் காப்புறுதி செய்யப்படவுள்ளனர். சுமார் 40 இலட்சம் பாடசாலை மாணவர்கள், எதிர்வரும் முதலாம் திகதி முதல் காப்புறுதி செய்யப்படவுள்ளனர்.
கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றின்போது, கல்வி சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக இதனை தெரிவித்தார்.
80 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் 4 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இம்முறை சிறுவர் தினத்தன்று பாடசாலை மாணவர்குளுக்கு வழங்கக்கூடிய மிகப்பெறுமதியான சொத்தாக இதனை கருத முடியும். அமைச்சு இதன் காரணமாகவே, இந்த காப்புறுதி திட்டத்தை ஆரம்பிப்பதாகவும், அவர் தெரிவித்தார். கல்லூரி அதிபர் உபாலி குணசேகர உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment