கொழும்பிலிருக்கும் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தியது ஏன் ? மகிந்த விளக்கம்!
த.தே.கூ.முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனின் மகள்மார் இரண்டு சிங்கள அரசியல் வாதிகளின் புதல்வர்களை மணந்திருக் கிறார்கள்.
30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் பூரண அமைதி நிலவும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை வடமாகாணத்து மக்கள் சரியாகப் பயன்படுத்தி தாங்கள் வாழும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள் ளும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.
வடமாகாணசபைத் தேர்தல் நடத்துவதை அரசு தனக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியாக கருதுகிறது. இந்தத் தேர்தலில் என்ன முடிவை மக்கள் எடுப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் உங்களுக்கு இப்போது சொல்லமாட்டேன். நான் அதனை இப்போது தெரிவித்தால் நீங்கள் அதைப்பற்றி எழுதி எனக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவீர்கள் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எனக்கு ஒரு விடயத்தை சரியாக கூற முடியும். கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட இந்த வடமாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கூடுதலான வாக்குகள் கிடைக்குமென்பதை தம்மால் உறுதியாக கூற முடியுமென்று சொன்னார்.
ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டது. அது உண்மை. ஆனால், எமது போராட்டம் ஆயுதப்போராட்டம் போன்று முடிவடைய முடியாது. எமது போராட்டம் ஒரு நீதியான போராட்டம். நீங்களும் உங்கள் பேரப்பிள்ளைகளும் இந்த மண்ணில் வாழ வேண்டுமென்றால் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது. தமிழ் மக்க ளுக்கு எதிராக அரசாங்க செயற்பாடுகளில் ஈடுபடும் போது நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்' என்று தமிழ்த் தேசியக்கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வடபகுதியில் தேர்தல் கூட்டமொன்றில் பேசியிருப்பது குறித்து இந்த சந்திப்பின் போது ஒரு பத்திரிகை ஆசிரியர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், தேர்தல் பிரசாரங்களில் எவரும் எதையும் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை அதிகரிப்பதற்கு எத்தனிப்பார்கள். அதைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுபோன்ற பாரதூரமான கருத்துக்களை தெரிவித்திருந்தால் அது தவறு. ஆனால், சம்பந்தன் போன்ற பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதி இவ்விதம் கருத்துக்களை தெரிவிப்பது தவறு என்றும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் இல்லையா? இளைப்பாறிய நீதியரசர்கள் இல்லையா? சட்டத்தரணிகள் இல்லையா? கல்விமான்கள் இல்லையா? அனுபவம் மிக்க அரசியல்வாதிகள் இல்லையா? அவ்விதம் இருக்கும் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் குடியிருக்கும் விக்னேஸ்வரனை தங்களின் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்தது ஏன் என்று கேட்க விரும்புவதாக ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் வடபகுதியின் 82 அரசியல்வாதிகள், 52 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், நீலன் திருச்செல்வம் போன்ற 24 கல்விமான்களை படுகொலை செய்தனர். எல்.ரி.ரி.ஈ. இந்தக் குற்றங்களை செய்திருக்காவிட்டால் வடபகுதியில் பிறந்து, வடக்கில் நிரந்தரமாக வாழும் ஒருவரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது பிரதம வேட்பாளராக தெரிவு செய்திருக்க முடியுமென்றும் ஜனாதிபதி சொன்னார்.
பொதுவாக ஒரு முதலமைச்சர், தான் அதிகாரத்தில் வீற்றிருக்கும் பிரதேசத்தி லேயே நிரந்தரமாக வாழ வேண்டும். இவ்வமைப்பின் தற்போதைய முதலமைச்சர் வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் வடபகுதியில் நிரந்தரமாக வாழ்வார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறதென்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, எனது அரசாங்கம் இன்று பாதைகளை அமைத்துவிட்டதனால் அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று அதன் நிர்வாகத்தை கவனிப்பதற்கான வாய்ப்பையும் நாம் செய்து கொடுத்துள்ளோம் என்று கூறினார்.
கடந்த காலத்தில் அரசாங்கம் வடபகுதியில் அனைத்து அபிவிருத்தி பணிகளையும் முழுமையாக நிறைவேற்றியது. அங்கு கழிவறைகளைக் கூட நாம் இராணுவத் தினரைப் பயன்படுத்தி நிர்மாணித்துக் கொடுத்தோம். வடக்குக்கு வசந்தம் இருக்கிறது.
ஆனால், தென்னிலங்கைக்கு வசந்தம் இல்லையே, ஹம்பாந்தோட்டைக்கு வசந்தம் இல்லையே. இவ்விதம் தான் எனது அரசாங்கம் சாதி, மத, பிரதேச பேதமின்றி வடபகுதியின் அபிவிருத்திக்கு முழுமையாக உதவியது என்று கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனின் மகள்மார் இரண்டு சிங்கள அரசியல்வாதிகளின் புதல்வர்களை மணந்திருக் கிறார்கள். ஒரு மகள் இந்த திருமணத்தின் மூலம் எனக்கு உறவுக்காரியாகிவிட்டார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறாரே என்று ஓர் ஆசிரியர் கேட்டதற்கு அப்படியான கடிதமொன்று எனக்கு கிடைக்கவில்லையே என்று தெரிவித்த ஜனாதிபதி, பொதுவாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தவுடன் சம்பந்தன் எனக்கு அதுபற்றி தொலைபேசியில் அறிவிப்பார். இந்தக் கடிதத்தைப் பற்றி அறிவிக்க வில்லை. ஆகவே தமது உரையை கேட்டுக் ரூ8!ஙநிஸிள, ஆதரவாளர்களை மகிழ்விக்க இவ்விதமாக கூறியிருக்கலாம் என்று ஜனாதிபதி கூறினார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இரயில் பாதையை அமைக்க வேண்டுமானால் அப்பாதையின் இரு மருங்கிலும் 500 மீற்றர் தொலைவில் உள்ள கண்ணி வெடிகளை அகற்ற வேண்டுமென்று இந்திய அரசாங்கத்தின் பொறியிய லாளர்கள் தெரிவித்தனர். அவ்விதம் செய்வதற்கு 10 முதல் 15 வருடகாலம் எடுக்குமென்று மதிப்பீடு செய்த போது இலங்கை இராணுவம் முன்வந்து கண்ணிவெடிகளை மிக விரைவில் அகற்றிவிட்டது.
அவ்விதம் சேவை செய்த இராணுவத்தை வடபகுதியில் இருந்து வெளியேற் றுங்கள் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் கேட்கிறார்கள் என்றும் ஜனதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment