Wednesday, September 25, 2013

மாகாண சபைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தப்படுவது என்ன? வாசுதேவ

வட மாகாணத்தில் சகல மாவட்டங்களிலும் தமிழ் கூட்ட மைப்பானது 2/3ற்கும் அதிகமான வாக்குகளைப் பெற் றுள்ளது அதேபோல் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் மூலம் பிரதான எதிர்க்கட்சிகளான இடதுசாரி களினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் வாக்குகளின் சதவீதம் மற்றும் ஆசனங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுற்று காணப்பட்டமையானது அவர்கள் மரணிக்கும் தறுவாயில் உள்ளதையே எடுத்துக் காட்டுகிறது என ஜனநாயக இடது சாரி முன்னணி தெரிவித்துள்ளது.

ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் வாசுதேவ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட் டுள்ளது இந்த மாகாண சபைத் தேர்தலில் பொதுவான முடிவாக வெளிப் படுத்தப்படுவது என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கீழ் ஜனநாயகம் செயற்படுவதாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை புதியதோர் ஆரம்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மூன்று மாகாணங்களிலும் இடம்பெற்ற தேர்தலின் முடிவானது பொதுவாக வெளிப்படுத்துவது யாதெனில் நாட்டு மக்களின் எண்ணங்களானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதே காணப்படுகிறது என்பதாகும்.

சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயக கட்சியானது வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டமை யினால் மக்கள் விடுதலை முன்னணி இடமற்றுப் போயுள்ளதானது, விசேட அம்சமாகும்.

வட மாகாணத்தில் சகல மாவட்டங் களிலும் தமிழ் கூட்டமைப்பானது 2ஃ3ற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளமையின் மூலம் தெளிவாவது யாதெனில் அப்பிரதேசங்களில் தமிழ் தேசிய உணர்வானது அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள மையாகும்.

கடந்த 3 வருடங்களாக அரசினால் செலவீனங்களை மேற்கொண்டு செயற்படுத்தப் பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் இதற்கு முகம் கொடுக்க போதுமானதாக இல்லாமையானது தெளிவாகின்றது. 2011ல் இடம்பெற்ற உள்ளூர் ஆட்சி தேர்தலின் போது வட மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையானது இம்முறை குறைவடைய காரணம் என்பதை நாம் உண்மையில் பரிசீலித்து பார்ப்பது அவசியமாகும்.

யுத்தத்துக்கு பின்னே உள்ள காலத்தில் வடபுலத்து மக்கள் சிங்கள மேலாதிக்கத்தின் அடிமைகள் என்ற மனோ நிலையிலிருந்து மாறுபட்ட நிலையில் சுதந்திரமான வாக்கெடுப்பின் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் பேரினவாதிகளின் இந்த பிழையான கருத்தை முறியடித்துள்ளனர். மேற்படி முடிவுகள் அரசின் சமூக பொருளாதார சீர்திருத்தங்கள் மூலமாக வடபுல மக்களுக்கு பலன்களை பெற்றுக் கொடுப்பது அரசின் பொறுப்பாகும்.

அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசுடன் இணைந்து செயற்படும் பங்காளிகளாக ஆக்குவதனை குறிக்கோளாக கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக ஒன்றிணைந்த மத்திய அரசின் நிர்வாகத்தினால் தற்போது மாகாண சபைகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ள அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்கி அம்மாகாண சபை யுடன் ஒத்துழைத்து செயற்படும் ஆளுநர் ஒருவரை தெரிந்தெடுப்பது அவசியமாகும்.

இச்சூழ்நிலையின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையில் வடக்கு மாகாண சபைக்கு பெரும்பான்மையாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதி களினதும் எதிர்க்கட்சியினதும் பொறுப்புக்களாக ஐக்கிய இலங்கையை ஏற்படுத்துவதற்கு அதிகாரங்களை பெற்றெடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதை நாம் அவதானிக்கின்றோம்.

இந்த மாகாண சபைத் தேர்தலில் பொதுவான முடிவாக வெளிப்படுத்துவது சுதந்திர முன்னணி அரசின் கீழ் ஜனநாயகமானது செயற்படுவதாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பானது இதனை புதியதோர் ஆரம்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com