வெடிகுண்டு பீதி! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
இலங்கையிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்த மான விமானம் பயணித்த விமானமொன்று ஸ்டேன்ஸ் டெட் விமானநிலையத்திற்கு அவசரமாக திசை திருப்ப ப்பட்டு தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்று ள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான யு.எல். 503 விமானம் 267 பயணிகளுடன் லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. இலங்கை யிலிருந்து விமானத்தில் இரு பிரித்தானிய பிரஜைகள் பயணித்ததாகவும் இவர்களில் ஒருவர் தம்மிடம் வெடிகுண்டொன்று உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த விமானம் நேற்று மாலை 7.30 மணியளவில் ஸ்டேன்ஸ்டெட் விமானநிலையத்திற்கு திசைதிருப்பப்பட்டுள்ளது. பின்னர் குறித்த பிரித்தானிய பிரஜைகள் இருவரும் எசெக்ஸ் பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விமானத்தில் பயணித்த மற்றையோர் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஹீத்ரோ விமானநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment