சுகாதாரச் சீர்கேடுடன் உணவகம்!! நீதிமன்றம் விதித்தது தண்டம்!
சுகாதாரச் சீரழிவுடன் காணப்பட்ட உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கும், அதன் இரண்டு பணியாளர்களுக்கும் யாழ்.நீதவான் நீதிமன்றம் 35 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளதுடன், உணவகத்தைப் பூட்டி எதிர்வரும் 17 ஆம் திகதிக்கிடையில் தேவையான திருத்தங் களை மேற்கொண்டதன் பின்னர் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகநலத்துக்கு ஒவ்வாத முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்ததாகக் கோப்பாய் சந்திப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீதும், இரண்டு பணியாளர்கள் மீதும் கோப்பாய் மற்றும் இருபாலைப் பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பா.சயந்தன், ம.அனுசூதனன் ஆகியோரால் கடந்த மாதம் 7 ஆம் திகதி யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இவர்களுக்கு பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு அபராதத் தொகையை விதித்தார்.
கடை உரிமையாளருக்கு ரூபா 15 ஆயிரமும், பணியாளர்களில் ஒருவருக்கு 12 ஆயிரமும், மற்றையவருக்கு 8 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment