Thursday, September 26, 2013

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய கையளிப்பு விழா இன்று! (படங்கள் இணைப்பு)

மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஐயாயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் கீழ் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய கையளிப்பு விழாவும் கணணி ஆய்வு கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று (26) நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி ஜே.ஹாரிஸ் தலைமையில் நடை பெற்ற இவ்வவைபவத்தில் பிரதம அதிதியாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸிம், கல்முனை மாநகர சபை ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஏ.எச்.நபார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(யு.எம்.இஸ்ஹாக்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com