த.தே.கூ. வின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுடன், விபரீத முயற்சிகளை விமர்ச்சிப்போம்!
வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய பெரும்பான்மையை பெற்றுள்ளதால் சிறு கட்சிகளின் ஆதரவு அவர்களுக்கு தேவையில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளி த்தும் விபரீத முயற்சிகளை விமர்சித்து சுமுகமான உறவைப் பேணிச் செல்ல எண்ணியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் முஸ்லிம்கள் உள்ள போதும் அனேகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதால் வாக்களிப்பில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதால் கனிசமான வாக்குகளைப் பெற முடியாது போனதென அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எனினும் வடக்கில் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக செயற்பட முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ஆசனம் கிடைத்தமை ஆறுதல் தருவதாகவும் வவுனியாவில் முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் இரண்டு பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வருவதற்கே இடமளித்துள்ளதால் ஹக்கீம் இதற்கு முஸ்லிம் கட்சிகள் இடையே ஒற்றுமையின்மையே காரணம் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று தனிச் சின்னத்தில் போட்டியிட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தாம் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் அரசாங்கத்தை விட்டு வெளியேற அவர்கள் தயாராக இருக்கவில்லை எனவும் ஹக்கீம் தெரிவித் துள்ளார்.
0 comments :
Post a Comment