Wednesday, September 4, 2013

நவிபிள்ளையை பான் கீ மூன் விசாரணை செய்ய வேண்டுமென கோரிக்கை - அஸ்வர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளையின் செயற்பாடுகள் தொடர்பில் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் விசாரணை நடத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை வந்து சென்றிருக்கும் நவநீதம்பிள்ளை பக்கச் சார்பாக செயற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத் திருத்தம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்தின் கீழான கட்டளை திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி.

இலங்கைக்கு வந்த நவநீதம் பிள்ளைக்கு காத்தான்குடி, அறந்தலாவ, அனிஞ்சிப் பொத்தானை ஆகிய இடங்களுக்குச் சென்று புலிகளால் மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளைப் பார்வையிட்ட பாதை தெரியவில்லையா? வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் பற்றி அவர் கவனம் செலுத்தவில்லை. புலிகள் மோசமான பயங்கரவாத அமைப்பு என்று நவநீதம்பிள்ளை தற்பொழுது கூறினாலும் புலிகளின் மாவீரர் நிகழ்வில் அவர் மலர்வளையம் வைத்துள்ளார்.

இவ்வாறு பக்கச் சார்பான முறையில் செயற்படும் இவர் எவ்வாறு இலங்கை தொடர்பில் பக்கச் சார்பற்ற அறிக்கையை முன்வைப்பார். இவரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேட்டுக்கொள்கிறேன். நவநீதம்பிள்ளை இன்னும் சிறுபிள்ளை அல்ல. வளர்ந்தவர் என்பதை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

வடக்கில் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கையானது ஜனநாயகத்தை நிலைநாட்டும் அரசின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திகள் தொடர்பில் புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் பலர் அறிந்துள்ளனர். பலர் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவிருக்கின்றனர்.

தற்பொழுது 'டயஸ்போரா' இல்லை. அரசு முன்னெடுத்திருக்கும் அபிவிருத்திகளை அவர்கள் ஏற்றுள்ளனர். அதேநேரம், வடக்கில் முன்னெடுக்கப் பட்டிருக்கும் வீதி மற்றும் புகையிரத பாதை அமைப்புக்கள் சிங்கள மக்களை வடக்கிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி. வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இவர் முற்றுமுழுதாக இனவாதக் கருத்தை வெளிளிட்டுள்ளார்.

அவருக்கு அரசியல் வராது. தனது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள அவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றார். அரசியலுக்காக வீர வசனங்களை, யதார்த்தமற்ற விடயங்களை பேசுவதன் மூலம் தமிழ் மக்களை இன்னுமொரு பேரழிவுக்குள் தள்ளிவிடவா தமிழ் அரசியல் வாதிகள் முயற்சிக்கின்றனர் என கேள்வி எழுப்ப வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதி இணைப்பாளர் ஆர். சிவராஜா.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வடக்கின் தமிழ் அரசியல் வாதிகள் உணர்ச்சிபூர்வமான வார்த்தைப் பிரயோகங்களைப் பேசி அரசியல் நடத்த முயல்வது தமிழர்களை மீண்டுமொரு இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்வதற் காகவா என்று கேட்க விரும்புகிறேன். ஏற்கனவே மூன்று தசாப்த போரால் பாதிக்கப் பட்ட இரு சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ முயன்று கொண்டிருக்கும் போது சந்தேகப்பார்வை தமிழர்கள் மீது விழும் வகையில் தமிழ் அரசியல் வாதிகள் பேசுவது நாகரீகமானதல்ல. அது எமது மக்களுக்கு மேலும் துன்பங்களையே தரப்போகி ன்றது.

தமிழர்களிடம் ஆயுதம் இருந்தால் சமஷ்டிக்கும் அப்பால் செல்லலாம் என தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கின்றார். மறுபுறம் அமிர்தலிங்கம், யோகேஸ் வரன், நீலன் திருச்செல்வம் போன்றோரை பரலோகம் போக்கியதன் பாதிப்பை இப்போதுதான் உணருகின்றோம் என கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

இப்படியாக தமிழ் மக்களைக் குழப்பி அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு முயலாமல் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து இவர்கள் செயற்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

...............................

1 comments :

Anonymous ,  September 4, 2013 at 6:22 PM  

pakkali bugger , puttalam booruwa

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com