குவைத்தில் இலங்கைச் சிறுவன் ஹரீஸ் மீண்டும் சாதனை!!
குவைத் , இஸ்லாமிய அழைப்பு நிலையம் (IPC-Islam Presentation Committee) அவ்காப் அமைச்சுடன் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் "அல் ருஹைமானி" குர்ஆன் மனனப் போட்டியில் 2013 ஆம் ஆண்டுக்கான அரபி அல்லாதவர்களுக்கான பிரிவில் இலங்கை மீயல்லை, மாத்தறையைச் சேர்ந்த மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் இம்முறையும் தனது பிரிவில் முதலாம் இடத்தை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்க்கிறார் .அவர் தனக்கான பரிசை நீதியமைச்சின் முதன்மைச் செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
கடந்த வருடப் போட்டியிலும் (அல் ருஹைமானி-2012) மற்றும் குவைத்தில் நடாத்தப்பட்ட இன்னும் பல குர்ஆன் மனனப் போட்டிகளிலும் இவர் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் அனைத்து பிரிவிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 550 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்……
1 comments :
Maashaa Allah May Allah bless for all his success
Post a Comment