Monday, September 2, 2013

சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதமேந்துவற்கு அவர்களை உசுப்பேத்துகிறார்...!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சு ரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் தமிழ் மக்கள் ஆயுதமேந்தும் கலாச்சாரத்துக்கு அவர்களை வழிநடாத்துகின்றார்..... அதற்காக ஆவன செய்துவருகின்றார் என பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெளிவுறுத்துகிறார். இதுதொடர்பில் குற்றப் புலனாய்வுப் பகுதியினர் மற்றும் பொலிஸார் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார். ஆயுதத்தைக் கையில் ஏந்தினால்தான் சிறந்த்தொரு தீர்வினைக் காணவியலும் என பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருப்பதாவது மிகவும் பயங்கரம்மிக்க பேச்சாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் அரச பணியாளர்கள் 360 பேருக்கு 102 மில்லியன் ரூபா வீடுகள் நிர்மாணிப்பதற்கான முதலீட்டு உதவியும், வீடுகள் கையளிக்கப்படும் 50 பேருக்கு காணி உறுதிப் பத்திரமும் வழங்கும் நிகழ்வு செங்கடகல, ஐக்கிய பௌத்த கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றபோது, அந்நிகழிவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விமல் வீரவங்ச இந்த விடயத்தைத் தெளிவுறுத்தினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர்,

‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய உரையொன்றை நான் பத்திரிகையொன்றில் கண்டேன். ஆயுதத்தைக் கையில் எடுத்தால் கூட்டாட்சிக்கும் அப்பாற்சென்று வெற்றி பெற முடியும். இவ்வாறு சொல்வது நான் அல்ல. சுரேஷ் பிரேமச்சந்திரன். கடவுளே, ஆயுதத்தைக் கையில் எடுத்த அனைவரும் செத்து மடிந்து விட்டார்கள். தமிழர்களை அலைக்கழிக்கும் செயல்கள் அனைத்தும் ஆகின. என்றாலும், 4 வருடங்கள் சென்று பிரேமச்சந்திரன் சொல்கிறார்... ஆயுதத்தைக் கையில் ஏந்தினால் கூட்டாட்சிக்கும் அப்பாற் சென்று தீர்வு காணவியலும் என்று. அதாவது, ஆயுதத்தைக் கையில் ஏந்தாவிட்டாலும் கூட்டாட்சிக்குச் செல்ல முடியும் என்பது அதன் கருத்து. இது நான் சோடித்த கதை அல்ல. சுரேஷ் பிரேமச்சந்திரனின் கதை. ஏனோ தெரியவில்லை. சிங்கள ஊடகங்களில் இந்தக் கதைகள் வெளியாவதில்லை. தமிழ் ஊடகங்களில் வெளியாகின்றன. நாங்கள் இவற்றை மொழிபெயர்ப்புச் செய்து பார்ப்பதால்தான் எங்களுக்குத் தெரிகிறது. இவற்றை சிங்களப் பத்திரிகைகள் பிரசுரிக்காமலிருப்பது ஒரு கருமம் பிடித்த செயல். தமிழர்களை உசுப்பேத்தும் செய்திகள் ஏதேனும் பேசப்பட்டால் நிச்சயம் அவை தமிழ்ப் பத்திரிகைகளில் களம் காண்கின்றன. அது என்ன ஊடகக் கலாச்சாரம் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த ஆள் என்னதான் சொல்கிறார்... இது ஒரு பாரதூரமான விடயம். கூட்டாட்சிக்கு அப்பாற் செல்கின்ற வெற்றி கைகூட வேண்டுமென்றால் ஆயுதத்தை மீண்டும் கரங்களில் ஏந்தியாக வேண்டும். அதாவது, ஆயுதமின்றிய வெற்றி கூட்டாட்சி வரை மட்டுமே செல்ல முடியும். அந்த இடத்தை அடைவதற்குத்தான் இந்த பெரிய மனுஷனுங்க முந்தியடிக்கிறாங்க. இதனை நாங்கள் கூட்டாட்சி என்று சொல்ல முடியாது. 13 இல் இருக்கின்ற முழு அதிகாரத்தையும் அநுபவிக்க முயன்றால் அது கூட்டாட்சியாகி விடுகின்றது. அனைத்து அதிகாரங்களும் அநுபவிக்கப்படாமல் இதனை கூட்டாட்சி என்று சொல்ல வியலாது. இப்போது அந்த 13 இனை முழுமையாக அநுபவிக்கவே முயற்சிக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் சுரேஷ் பிரேமச்சந்திரன் சொல்கிறார்.... ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று......


எங்கள் நாட்டின் இரகசியப் பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ஏன் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது பாரியதொரு பிரச்சினை. உத்தியோகபூர்வமாக அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்த உற்சாகப் படுத்துகிறார்கள். அதற்கு எதிராக அரசாங்கம் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படாமையினால் எங்களுக்கு விளங்குவது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு கூட்டாட்சி செய்வதற்கு முழு அதிகாரம் அளிக்கிறோம்.. அதற்கு மேலும் உங்களுக்குத் தேவைகள் இருந்தால் ஆயுதங்களை ஏந்துங்கள்... என்றுதான் குறிப்பிடுகிறது. முழுமையான கூட்டாட்சி எடுக்கிறோம் என்று ஏன் சொல்கிறார்கள். அதற்காகத்தான் விக்னேஷ்வரனைக் களத்தில் குதிக்கச் செய்தார்கள். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரசியலமைப்புப் பற்றி நன்கு அறிவார். அரசியலமைப்பில் வரிகளுக்கு இடையேயான பொருள், எழுத்துக்களுக்கு இடையிலான பொருள், வாக்கியங்களுக்கு இடையிலான பொருள், உயிர்க்குறிகள் மீதுள்ள பொருள்.. அவை அனைத்தையும் நன்கு அறிவார். அதனால்தான் கூட்டாட்சி அமைப்புக்கு விக்னேஸ்வரன் போன்ற ஒருவர் தேவை. அந்தக் கூட்டாட்சியை பஸ் தரிப்பு நிலையத்திற்கு விரட்டிவிட்டு மீண்டும் ஆயுதங்களை ஏந்த வேண்டுமென்றால், மற்றொருவர் அவசியப்படுவார். கூட்டாட்சி வரை நாங்கள் விக்னேஸ்வரனை அழைத்துச் செல்கிறோம் என்று இப்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகிறார். அதற்கு அப்பால் கூட்டிச் செல்ல வேண்டுமானால் உங்கள் கரங்களில் ஆயுதங்கள் இருக்க வேண்டும். இதனால் ஒன்று உங்களுக்குத் தெளிவாகும். அதாவது நாங்கள் தோற்கடித்த எதிரிகளின் சக்தி இன்னும் ஒழியவில்லை. அவர்கள் இந்நாட்டைக் குட்டிச் சுவராக்கவே பார்க்கிறார்கள். இவை வெறும் கதைகள் அல்ல. உங்களுக்கும் எங்களுக்கும் இப்போது ஒரு பொறுப்பு இருக்கிறது. இப்போது இந்த வங்கிக் கடனை பேசாமல் எடுத்துச் சென்று மீதியுள்ள வீட்டு வேலைகளை நாங்கள் செய்து எங்கள் பாட்டில் நாங்கள் இருந்துவிடுவோம் என்று இருக்காமல், இந்த தாய் நிலம் பற்றி, எங்கள் இனம் பற்றி, நாடு முகங்கொடுக்கும் சவால்கள் பற்றி அவதானமாக இருங்கள். இந்நாடு மீண்டும் மிகவும் கஷ்டப்பட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம். அதனால், எந்தவித குறைபாடுகள் நாட்டில் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு நாட்டை வலுப்படுத்தும் கடமையும் பொறுப்பும் எங்கள் அனைவருக்கும் உள்ளது.

(நீளும்....)

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com