ருகுணு பல்கலைக்கு ஜப்பான் நிதியுதவி...!
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பான் உதவிநிறுவனமொன்றின் நிறுவுனர் பிரதமர் தி.மு. ஜயரத்னவை அவரது இல்லத்தில் சந்தித்து ருகுணு பல்கலைக்கழகத்தின் விடுதிவசதிக்காக நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஜப்பான் உதவி நிறுவனமொன்றின் நிறுவுனர் விடுதி வசதி குறைவாகக் காணப்படும் ருகுணுப் பல்கலைக் கழகத்திற்கு விடுதிவசதிக்காக நிதியுதவி வழங்கியுள்ளார். கூடவே, ஜப்பான் நிதியுதவியாளர் சந்தித்தவேளை நோயில் இருந்த இலங்கைப் பிரதமர் தி.மு ஜயரத்னவின் மருத்துவச் செலவுக்கும் பல்லாயிரம் ரூபாய்களை வழங்கியதாக நம்பகத் தன்மைவாய்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிகழ்வில் கண்டியைச் சேர்ந்த விமலவன்ச தேரரும் கலந்து கொண்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment