முதலமைச்சர் வேட்பாளராக மாட்டேன்... நான் ஜனாதிபதி வேட்பாளராகின்றேன்...! - சஜித்
தனது ஒரே குறிக்கோள் தெற்கின் முதலமைச்சராக வருவது அல்ல... மாறாக, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்வருவதே என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கும், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளாராக நிற்பதற்கு மே தான் தயாராக இருப்பதாக அவர் தெளிவுறுத்துகிறார்.
பொதுமக்கள் தன்னை ஜனாதிபதி வேட்பாளராகக் காண்பதற்கே ஆசை வைத்திருக்கின்றார்கள் எனக் குறிப்பிடும் சஜித் பிரேமதாச, தான் நாடெங்கிலும் பயணிக்கும் போது, பொதுமக்கள் தன்னிடம் அதனையே எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment