ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களுக்கே முதலமைச்சர் பதவி! - பிரதமர்
ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமோ அல்லது திருத்தமோ மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் பல வருடங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்ட ஒன்றாகும் என அறிக்கையொன்றின் மூலம் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
மத்திய மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பில் சில ஊடகங்களில் பிரசுரமாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென அந்த அறிக்கையில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலுவையிலுள்ள தமது வீட்டிற்கு அருகில் திரண்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள், முதலமைச்சர் பதவி தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து பிரதமரிடம் வினவியதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எஸ்.என்)
0 comments :
Post a Comment