Tuesday, September 24, 2013

சூத்திரதாரிகளின் பிடியில் த.தே.கூ சிக்க கூடாது!

வடமாகாணத்திற்கான தேர்தல் இடம்பெற்றது, இலங்கை அரசாங்கத்தின் அரசியல் ரீதியான வெற்றியென த ஹிந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ பயங் கரவாதத்திற்கெதிரான யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ள்ளன.

இந்நிலையில் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப் படுத்தும் வகையில், தேர்தல் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவது முக்கியத்தும் வாயந்ததென ஹிந்து செய்தித்தாளின் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுதந்திரமாகவும், அமைதியாகவும் தேர்தல் இடம்பெற்றுள்ளமைக்கு சிறந்த உதாரணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற்றுள்ளமையாகும் எனவும் சூத்திரதாரிகளின் பிடியில் சிக்காமல் நாட்டை கட்டியெழுப்ப, அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு செயற்பட வேண்டுமென த ஹிந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments :

Anonymous ,  September 25, 2013 at 11:03 AM  

இவர்களே சூத்திரதாரிகள் இவர்களிடம் இன்னொரு சூத்திரதாரிகள் சிக்குவார்களா?
இலங்கைப் பிரச்சனையை இலங்கையரசுடன் தான் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.அமெரிக்காவில் ஐரோப்பாவில் இந்தியாவில் அல்ல. பேசமுடியாவிட்டால் பேசவலுவுள்ளவர்கள் இல்லை என்பதாகவே அர்த்தப்படும்.

விக்கினேஸ்வரனின் வாழ்வு சூழல் அவர் வைத்துள்ள உறவுகளில் சிறுநம்பிக்கை பிறந்தாலும் முன்னம் தோன்றிய வேதாளங்கள் இவரையும் முருங்கை மரத்திற்கு இழுத்துச் செல்வார்கள்...!...?.

Arya ,  September 26, 2013 at 1:53 AM  

ராஜபக்ச அரசாங்கத்திக்கும் தமிழ் மக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள், ஆனால் வட பகுதி தமிழர்கள் தாம் நன்றி மறந்தவர்கள் என காட்டியுள்ளார்கள், லிபெரசன் ஆபரேஷன் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றிய ராஜீவ் காந்தியை எப்படி புலிகள் கொன்றர்களோ அதே மாதிரி இதுவரை காலமும் கஷ்டம், துன்பம், இழப்புக்களை தேடித்தந்த பேய்களிடமிருந்து விடுவித்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்று போக வைத்து தம் உண்ட கோப்பையில் பேலும் ஒரு இனம் என மறுபடியும் நிருபித்துள்ளனர்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com