சிரியாவில் சரின் விஷவாயு பயன்படுத்தியது போர் குற்றமே - ஐ. நா. பாதுகாப்பு சபையில் அறிக்கை
சிரியாவில் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி ஆசாத் படையினர் விஷக் குண்டுகளை வீசி 1429 பேரை கொன்ற தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப்படையில் ஐ. நா. ஆய்வாளர்கள் சிரியாவில் சோதனை மேற்கொண்டனர். இதனறிக்கையை ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ முன் நேற்று முன்தினம் ஐ. நா. பாதுகாப்பு சபையில் சமர்ப் பித்தார்.
இந்த ஐ. நா. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது சிரியாவில் கடந்த மாதம் ஜனாதிபதி ஆசாத் படைக்கும், போராளிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அப்போது சரின் என்ற விஷவாயு பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான சுற்றுச்சூழல் இரசாயன மற்றும் மருத்துவ மாதிரிகளுடன் தெளிவான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களை ஐ. நா. ஆய்வாளர்கள் சேகரித்து இருக்கிறார்கள்.
சரின் என்ற இந்த விஷவாயு நரம்புகளை பாதித்ததால் குழந்தைகள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
தலைநகர் டமஸ்கஸ் அருகே போராளிகள் வசமிருந்த கவுதா பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று அந்த அறிக்கையில் சொல்லப் படவில்லை.
இருந்தும் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு செய்தியாளர்களை பான் கீ மூன் சந்தித்தார். அப்போது, பொதுமக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த மொசமான இராசாயன தாக்குதலை 21ம் நூற்றாண்டின் மோசமான தாக்குதலாகவும், போர் குற்றமாகவும் அறிவிப்பதாகக் கூறினார்.
0 comments :
Post a Comment