Tuesday, September 10, 2013

ஐ.தே.கட்சியின் நித்திரையுடனான கொள்கை, ஜனநாயகத்தை படுபாதாளத்திற்கு இட்டுச்செல்லும்

ஐக்கிய தேசியக் கட்சியின் நித்திரையுடனான கொள்கை, ஜனநாயகத்தை படுபாதாளத்திற்கு இட்டுச்செல்லுமென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, சுசில் பிரேம் ஜயந்த் ஆகியோர், இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் மீண்டும் நட்புறவு ரீதியாக அழைப்பு விடுக்கி ன்றோம். ஒரு ஆரோக்கியமான தேர்தலில் பிரவேசிக்குமாறு நாம் அழைப்பு விடுக் கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நித்திரையிலான செயற்பாடு ஜனநாயகத்திற்கே ஒரு பேரிடியாகும்.

67வது ஆண்டு நிறைவின்போதும், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறிய ஒரு கருத்து தான், அடுத்த ஆண்டு மாநாட்டை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங் கத்தின்போதே நடாத்துவது என்பதாகும். அவருடைய இந்த கூற்றை 50வது ஆண்டு நிறைவின்போதும் அவதானித்தோம். 51 இலும் கூறினார். 57, 60, 62ம் ஆண்டுகளிலும் கூறினார்.

ஆனால் அதற்கு ஒர் வேலைத்திட்டம் இருக்க வேண்டும். ஒரு தட்டில் கொண்டு வந்து அரச அதிகாரத்தை தருவார்கள் என நான் நினைக்கவில்லை. ஒரு பலமான அரசியல் கோட்பாட்டுக்கும், சுலோகங்களுக்கும் ஏற்ப, தேர்தலில் பிரவேசிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அதற்கான சிறந்த தினமும் இன்றாகும். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தற்கொலையிலிருந்து விடுபடும் நாளாக இன்றைய தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இந்தளவு கூக்குரலிடுகின்றது. எமது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குறைந்த பட்ச ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒருவராவது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்களா? ஜே.வி.பி. க்கு அவ்வாறு சென்றார்களா? ஆனால் எங்கள் பக்கம் ஏராளமானோர் வருகின்றார்கள்.

தமது கட்சியின் மேல் நம்பிக்கை இல்லாததன் காரணமாகவே, அவர்கள் இவ்வாறு அணியணியாக வருகின்றார்கள். தமது கட்சி தலைமைத்துவம் தொடாபாகவும், கட்சி தொடர்பாகவும், தமது கட்சி அஙகத்தவர்களுக்கு உறுதி மொழியை வழங்க வேண்டும். அந்த இடத்திலிருந்து விடுபடாமல், கட்சியை முன்னெடுத்து செல்ல முடியாது. மாண்புமிகு ஜனாதிதி அவர்கள், கட்சியின் தலைவர் என்ற வகையிலும், நாட்டின் தலைவர் என்ற வகையிலும், இந்த உத்தரவாதத்தை அவர் வழங்கி யுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com