வட மாகாண தேர்தலில் வாக்களித்த எவருக்கும் ஈழ நாடு தொடர்பான உணர்வு இருக்கவில்லை - கோபாலசுவாமி
வட மாகாண தேர்தலில் வாக்களித்த எவருக்கும் ஈழ நாடு தொடர்பான உணர்வு இருக்கவில்லையென தமிழ்நாடு முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் கோபாலசுவாமி தெரி வித்துள்ளார். திரு கோபாலசுவாமி வட மாகாண தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளராக செயற்பட்டவராவார்.
வட மாகாண தேர்தல் தொடர்பாக இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் தினமலர் பத்திரிகைக்கு இலங்கை தேர்தல் தொடர்பாக வழங்கிய பேட்டியில் கோபாலசுவாமி இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கில் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு தரப்பினர் மக்களின் பாதுகாப்பிற்காக உஷார் நிலையில் இருந்த போதிலும் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரியும் வாக்களப்பு நிலையங் களுக்கு பிரவேசிக்கவில்லையென்றும் கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.
முதலில் கண்காணிப்பு பணிகளுக்காக வடக்கிற்கு செல்லும் போது தமக்கும் ஏனைய சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் வடமாகாண தேர்தல் தொடர்பாக சந்தேகம் நிலவிய போதிலும், வடக்கில் காலடி எடுத்து வைத்தவுடன் இவ் அனைத்து சந்தேகங்களும் நீங்கியதாக கோபாலசுவாமி தினமலர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக தமது ஜனநாயக உரிமையை உறுதிப் படுத்துவதற்காக அரசாங்கம் வசதி செய்து கொடுத்திருந்ததாகவும் அவர் சுட்டிக் காடடியுள்ளார். அத்துடன் முகாம்களில் இருந்த மக்களுக்கும் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்காக இலவச போக்குவரத்து வசதிகளும் அரசாங்கத்தினால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. வட மாகாண மக்கள் வாக்களிப்பு தொடர்பாகவும் அவர்களது ஜனநாயக உரிமை தொடர்பாகவும் அதீத நம்பிக்கை வைத்திருந்ததாகவும் கோபாலசுவாமி தினமலர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment