வவுனியாவில் மஞ்சள் பயிர் செய்கை ஆரம்பம்!
வவுனியா விவசாய திணைக்களத்தினால் பரீட்சார்த்த முறையில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்ததை தொடர்ந்து மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படு வதாக வவுனியா விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் இப்பயிர் செய்கை தொடர்பாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள் உட்பட 25 விவசாயிகள் இப்பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இப்பயிர் செய்கை தொடர்பாக பயிற்சியை மேற்கொண்ட பம்பை மடு, மாந்தை, பாலமோட்டை, நெடுங்கேணி பிரதேச விவசாயிகள் தமது சொந்த இடங்களில் மஞ்சள் பயிர் செய்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் இப்பயிர் செய்கைக்கு ஏற்றுமதி அதிகாரசபையின் உதவி நாடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment