ஐ. நா. மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி நியூயோர்க் பயணம்
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 68 வது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி நேற்று அதிகாலை அமெரிக்கா பயணமானார்.
ஜனாதிபதி எதிர்வரும் செவ்வாய் கிழமை ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றுவார். அவர் 2005ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய நாடுகள் பொது சபையில் 6வது தடவையாக இம்முறை உரையாற்றுகின்றார். அவர் முதன் முதலாக 2006ம் ஆண்டு பொது சபையில் உரையாற்றினார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் 2011ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபை மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றிய போது நவீன உலகின் நிலைப்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் பயங்கரவாதம் பாரிய சவாலாகும் எனும் தொனி பொருளில் உரையாற்றினார்.
அவ்வுரையின் போது பேச்சுவார்த்தை, ஒருங்கிணைப்பு முரண்பாடுகளுக்கான தீர்வை பெற்று கொள்வதற்கு ஒரே வழி கலந்துரையாடல் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று நியூயோர்க் நோக்கி பயணமான ஜனாதிபதி தனது 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பன்கீ மூன் பொது நலவாய சபை செயலாளர் கமலேஸ் ஷர்மா உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகளின் பல தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
நியூயோர்க் நகரில் தங்கியருக்கும் காலப்பகுதியில் பல்வேறு பேச்சுவார்த்தை களிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
0 comments :
Post a Comment