எனது வேலையை நான் செய்துவிட்டேன்... அடுத்து இருப்பது ஜனாதிபதியின் வேலையே! -தயாசிறி
தனது வேலையைத் தான் சரிவர நிறைவேற்றியிருப் பதாகவும், அடுத்திருப்பது ஜனாதிபதியின் வேலையே எனவும் வட மேல் மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற தயாசிறி ஜயசேக்கர குறிப்பிடுகிறார்.
'வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவியைத் தனக்குப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்னிடம் வாக்குறுதி அளித்தார்' எனவும் அதுபற்றி தான் அரசியல் மேடைகள் கூறி வியாபாரம் செய்யவில்லை எனவும் தயாசிறி குறிப்பிடுகிறார்.
தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு முன்னரேயே ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டார் எனவும், முதலமைச்சர் பதவி வெளிபடையாக இருந்தமையினாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அதிகூடிய வாக்குகள் இம்முறை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் கிடைத்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment