மதுபோதையால் வந்த வினை! வாத்துவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பணிநீக்கம்!
மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கடமைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக வாத்துவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பானந்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய, வாத்துவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நேற்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment