Monday, September 16, 2013

கூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு தமிழ் தேசியம் என்பது அரசியலுக்கே -பிரதேச சபையின் உபதலைவர் மாணிக்கம்

தாழ்த்தப்பட்ட தமிழர் என்பதால் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பருத்தித் துறை பிரதேச சபையின் உபதலைவர் மாணிக்கம் லோகசிங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்.

வடக்கில் தாழ்த்தப்பட்ட தமிழர் என்பதால் நான் பெயர்ப் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்படுவேன் என்பதை ஏற்கெனவே உணர்ந்தவனாக நான் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன்.

என்னை வேட்பாளர் பட்டியலில் சேருங்கள் என்று நான் யாரிடமும் கேட்கவில்லை. ஆனால் சுரேஷ் பிரேமசந்திரன் அண்ணன் என்னை சந்தித்து அவரே எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டார். ஆனால் இறுதி நேரத்தில் தாழ்த்தப்பட்ட தமிழருக்கு இரண்டு இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறி என்னை கழற்றி விட்டார்கள்.

அவர்கள் கூறும் சாதி வேறுபாடு தாழ்த்தப்பட்ட தமிழர், உயர் குல தமிழர் என்பதை தேர்தலில் கூறக் கூடாது. அப்படி நோக்கினால் இன்று யாழ் குடாநாட்டில் 50ற்கு 50 வீதமுள்ளனர். அப்படியானால் 15 வேட்பாளர்களில் 7 வேட்பாளர்களையாவது தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும். இல்லையேல் வெறுமனே இரண்டு பேர் மட்டும்தான் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்ற கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் சகல இன மக்களையும் அரவணைத்து கொண்டு செல்லக்கூடிய கட்சி. இதில் இணைந்து கொண்டால்தான் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுக்க முடியும். என்பதாலேயே நான் ஐ.ம.சு. கூட்டமைப்பில் சேர்ந்தேன் என பிரசார மேடையில் ஜனாதிபதி முன்னிலையிலே மாணிக்கம் லோக சிங்கம் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com