Sunday, September 15, 2013

உண்ணா விரதத்தில் கூரையில் இருந்த மந்திரி, கீழே விழுந்த கதை தெரியுமோ?

தான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, ஆளும் கட்சியுடன் இணைந்துவிட்டேன் என்று தயாசிரி ஜயசேக்கர குறிப்பிட்ட கருத்தினைக் கேட்டு, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக கூரை மீது ஏறியிருக்கும் போது, கீழே விழுந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஆடிஅப்பு தற்போது கொஞ்சம் வருத்தமாக இருப்பதாகவும் தலைசுற்றுவதாகவும் குறிப்பிடுகிறார்.

‘நானாக நினைத்தே கூரை மீது ஏறினேன். அடுத்தவர்களின் பேச்சினைக் கேட்டு கூரை கூரையாய் நான் ஏறுவதற்கு நான் மடையன் அல்ல. ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே நான் கூரை மீது ஏறினேன். ஆயினும் எனது நியாயமான காரணத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை. கூரையில் இருந்து விழுந்து எனக்கு சற்று வருத்தமாக இருக்கிறது. தற்போது தலை சுற்றுவது போல் உணர்கிறேன். ஆயினும் தற்போது தேறி வருகிறேன். ஈஸீஜீ எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு 68 வயதாகின்றது. அரசியல் வாழ்வுக்கு 45 வயதாகின்றது. நாங்கள் தலைவர்களை உருவாக்கினோம். ஐதேக வை விட்டு எனக்கு வேறு கட்சிகள் இல்லை. நான் அரசியலிலிருந்து விலகப் போவதுமில்லை’ எனவும் நிகழ்வு தொடர்பில் வினவிய போது ஆடிஅப்பு குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment