Monday, September 2, 2013

அரசிக்கு தலை குனிந்து வணக்கம் தெரிவித்த பாப்பரசர்!

ஜோர்தான் நாட்டு அரசிக்கு தலை குனிந்து வணக்கம் தெரி வித்து, வரவேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள் ளார் பாப்பரசர் பிரான்சிஸ். வழக்கமாக பாப்பரசர் பட்டத்தை ஏற்றிருப்போர் யாருக்கும் தலைவணங்கி வணக்கம் செலுத்த மாட்டார்கள். மாறாக அவர்களை சந்திப்பவர்களே தலை வணங்கி வணக்கம் செலுத்துவார்கள்.

ஆனால் பாரம்பரியமாக இருந்து வருவதை உடைத்து புதுப் புரட்சி படைத்து வரும் பாப்பரசர் பிரான்சிஸ், ஜோர்தான் நாட்டு அரசிக்கு தலைவணங்கி வணக்கம் செலுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஜோர்தான் நாட்டு அரசி ரனியா தனது கணவரான மன்னர் 2ம் அப்துல்லாவுடன் வத்திக்கான் நகருக்கு வந்திருந்தார். அங்கு போப்பாண்டவரை அவர்கள் இருவரும் சந்தித்தனர். அப்போது வழக்கத்திற்கு மாறாக தலைவணங்கி அரசியை வரவேற்றார் பாப்பரசர். மேலும் அரசியின் கை பிடித்து கை குலுக்கியும் வரவேற்றார்.

அதேபோல மன்னர் 2ம் அப்துல்லாவுக்கும் அவர் தலைவணங்கி வணக்கம் தெரிவித்துள்ளார். வத்திக்கான் நகரில் உள்ள பாப்பரசரின் நூலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இதுகுறித்து வத்திக்கான் நகர அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பாப்பரசர் பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர். மரபுகள் குறித்துக் கவலைப்படாதவர். பாப்பரசராக பட்டம் சூடப்படுவதற்கு முன்னர் எவ்வாறு இருந்தாரோ அதேபோலவே இப்போதும் சாதாரண மனிதர்களில் ஒருவராக இருக்கிறார் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com