நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கையை நிராகரித்தார் ரவிநாத்!
2014 மார்ச் மாதமளவில் மனிதவுரிமை சம்பந்தமான பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறின், பன்னாட்டுச் சமூகம் தனது சொந்த விசாரணை முறையை நிறுவு வதற்கான கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என நவிபிள்ளை தெரிவித்த வாய்மூல அறிக்கையை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து நேற்றைய அமர்வில் பதிலளித்துப் பேசிய இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இலங்கைக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளதுடன், நவநீதம்பிள்ளையின் வாய்மூல அறிக்கை யின் பிரதி, உரிய காலத்தில் தமக்கு வழங்கப்படவில்லை என்றும், தமக்கு பதிலளிக்க ஒரு இரவு மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாணசபை உள்ளிட்ட, எல்லா மாகாணசபைகளுடனும், இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்குத் தாம் உறுதியளிப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment