Wednesday, September 25, 2013

மல்லாகத்தில் கைக்குண்டு தாக்குதல்!

மல்லாகத்தில் இனந்தெரியாதோர் நேற்று இரவு 10.10 மணியளவில் மேற்கொண்டு கைக்குண்டு வீச்சில் ஞானப்பிரகாசர் சனசமூக நிலையம் சேதமடைந்துள்ளது.

மல்லாகம் மத்தியில் உள்ள அம்பனாக்கடவை வீதியென அழைக்கப்படும் சேச் வீதியில் உள்ள சுவாமி ஞானப்பிரகாசர் சனசமூக நிலையம் மற்றும் நூலகக் கட்டிடத்தின் அருகாமையில் கைக்குண்டு வீழ்ந்து வெடித்ததில் சனசமூக நிலையத்தின் கட்டிடச்சுவர் மற்றும் அருகில் உள்ள வீட்டின் கதவு சுவர் என்பவற்றில் குண்டுச் சிதறல்களால் சேதமும் ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்தவாகள் இந்த கைக்குண்டுத் தாக்குதலை மேற்க்கொண்டு விட்டு தப்பிச்சென்றதாக பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்.

அது மட்டுமல்லாது குறிப்பிட்ட சனசமூக நிலைய முன்றலில் இரவு வேளையில் இளைஞர்கள் இருந்து கதைப்பதாகவும் அவர்களை இலக்க வைத்து இந்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தை கேள்வியுற்ற தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்சி தலைமையிலான் பொலிஸ் குழுவினர் உடனடியாக சம்பவம் நடை பெற்ற இடத்திற்க்கு சென்று விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.

1 comments :

Arya ,  September 25, 2013 at 1:05 PM  

கூட்டமைப்பு வென்றத்தும் உடனே பயங்கரவாதம் வெளியே வந்து விட்டது, இனி போகப்போக தான் இருக்கு.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com