Saturday, September 14, 2013

லொறியினுள் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு! கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் சம்பவம்!

1996 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனைப் பொலிஸாரால் கைப் பற்றப்பட்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்குள்ளிருந்து 17 வருடங்களின் பின் மீண்டும் அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

எல். ரி. ரி. ஈ.யினரால் மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கிராம் நிறையுடைய டி. என். டி. ரக வெடிபொருட்களே தற்போது கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இது தொடர்பில் தெரியவருவதாவது எல். ரி. ரி. ஈ. யினர் வெடிப் பொருட்கள் கடத்தினார்களென்ற சந்தேகத்தின் பேரில் குறித்த லொறி 1996 ஆம் ஆண்டில் கொட்டா ஞ்சேனைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அதன்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 75.5 கிலோ கிராம் நிறைவுடைய டி. என். டி. வெடிபொருட்கள் அடங்கிய 06 பெட்டிகள் மீட்கப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இது குறித்து தொடர்ந்தும் விசாரணை செய்து வந்த நிலையில் குறித்த லொறி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 17 வருடங்களின் பின் குறித்த லொறியை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்த போது லொறிக்குள் மேலும் வெடிப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்படி பெற்றோல் தாங்கிக்குள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கிராம் நிறையுடைய 08 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்ட டி. என். டி வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இது குறித்து நீதிமன்றிற்கு அறி வித்து வெடிபொருளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படு மெனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment