வட மாகாணத்தில் தமிழ்க் கூட்டணி வெற்றி... முதலமைச்சராக விக்னேஸ்வரன்
நேற்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் வட மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டணியால் முடிந்துள்ளது.
வட மாகாண சபைக்காக தமிழ் தேசியக் கூட்டணி மாகாண சபையின் 30 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 07 ஆசனங்களை மட்டுமே பெற்று இரண்டாவது இடத்தில் நிற்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணத்தில் 01 ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது.
வட மாகாண சபையின் மொத்த ஆசனங்கள் 38 என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமகன் பைரூஸ்)
1 comments :
தமிழர் கூட்டமைப்பின் உசுப்பேற்றும் வசனங்களை மக்கள் மிகவும் ரசித்து விரும்புகிறார்கள் வீரவசனங்கள் தங்கள் வயிற்றை நிரப்பும் என்றும் நம்புகிறார்கள்.
Post a Comment