கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் இருந்தும் கைதிகள் விடுதலை
தேசிய சிறை கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறிய குற்றமங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ் சிறைச்சாலையில் இருந்தும் இப் பொது மன்னிப்பின் கீழ் 9 கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிறைச்சாலை பொறுப்பதிகாரி எஸ்.இந்திரன் தெரிவித்தார்.(பாறூக் சிகான்)
0 comments :
Post a Comment