பாரிய ரயில் விபத்தொன்று, சாரதியின் சமயோசித முயற்சியால் தவிர்ப்பு
இந்தியாவில் இடம்பெறவிருந்த பாரிய ரயில் விபத்தொ ன்று, சாரதியின் சமயோசித முயற்சியால் தடுக்கப்பட்டு ள்ளது. இதனால் 100 பேரின் உயிர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொள்ளாச்சி பகுதியில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதுகாப்பற்ற ரயில் கடவையை பஸ் கடக்க முயன்ற சந்தர்ப்பத்தில், எதிர்பாராத விதமாக பயணித்த ரயில் பஸ்சுடன் மோத விருந்தது. எனினும் ஒருசில நிமிடங்களில் சாரதியின் முயற்சியால் விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த வீதியில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையிலும் பயணிப்பதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வாகன சாரதிகள் குறித்த வீதியை பயன்படுத்துவது தொடர்பில் தற்போது இந்தியாவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாதை நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே, குறித்த பாதையில் பயணிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த ரயில் கடவையில் கடமையாற்றும் ஊழியர்கள், எச்சரிக் கப்பட்டுள்ளதோடு, சமிக்ஞைகள் கிடைக்கும் பட்சத்தில், உடனடியாக ரயில் கடவையை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments :
Post a Comment