Saturday, September 14, 2013

குழிபறிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் வாதி

மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்ளும் நிலை உருவாகிவருகிறது.

விருப்பு வாக்குகளை வேட்டையாடும் நோக்குடனும், ஒருவரின் மக்கள் ஆதரவை மற்றயவர் தட்டிக்கொட்டி மங்கச் செய்வதிலும் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இப்போது குறியாக உள்ளதுடன் இதற்காக அவர்கள் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு வருகின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும் படலத்தில் கைதேர்ந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உச்ச அளவில் அரங்கேறி வருகிறது.

நேற்று இரவு சங்கானையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் மேற்படி கழுத்தறுப்பு வேலை மிக வெளிப்படையாகவே அரங்கேறியது.

குறிப்பிட்டு சொல்லுவதானால் கூட்டமைப்பின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது இந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேடையின் பின்பக்கமாகச் சென்று மின்சாரத்தை துண்டிதுள்ளார். அதனைவிட கூட்டங்களில் பேசுவதற்கு கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதையும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் வலிந்து தலையிட்டு தடுத்து விடுவார் அல்லது குழப்பி விடுவாராம்.

இதனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி அங்கத்தவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளாராம். இந்த வெறுப்புணர்வு எந்த நேரத்திலும் கட்சிக்குள் பூகம்பமாக வெடிக்கும் என்று கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment