Sunday, September 1, 2013

அமெரிக்காவுக்கு தலையிடியை கொடுத்த ஸ்னோடெனுக்கு கௌரவ விருது !

அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடெனுக்கு ஜெர்மனி நாட்டு அமைப்பின் ஊழலை அம்பலப்படுத்துபவர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சங்கமும், அணு ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச வழக்குரைஞர் சங்கத் தின் ஜெர்மனி பிரிவும் சேர்ந்து ஊழலை அம்பலப்படுத் துபவர் பரிசை 1999ஆம் ஆண்டு உருவாக்கின.

இந்த ஆண்டுக்கான இப்பரிசுக்கு அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடென் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெர்லினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் இப்பரிசு வழங்கப்பட்டது. ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஸ்னோடென் சார்பில் அவரது நண்பர் இப்பரிசைப் பெற்றுக் கொண்டார். ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத அமெரிக்காவின் கண்காணிப்புப் பணிகளை துணிச்சலாக அம்பலப்படுத்தியதற்காக ஸ்னோடெனுக்கு இப்பரிசு வழங்கப்படுவதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் பிரபல பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டும் கலந்து கொண்டார். அவர், ஸ்னோடென் அனுப்பி வைத்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவு அமைப்புகளின் மிகவும் ரகசியமான ஆவணங்களைக் கொண்டு பல்வேறு கட்டுரைகளை 'கார்டியன்' பத்திரிகையில் எழுதியுள்ளார். அவர், அமெரிக்காவின் உளவு வேலைகளை அம்பலப்படுத்துவதற்கு ஸ்னோடென் துணிச்சலாக எடுத்த முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com