பிரபாகரனின் அதிகார ஆசையே எல்லாவற்றிற்கும் காரணம் - இந்திய மத்திய முன்னாள் அமைச்சர்
பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழீழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தைப் பிரித்தால் நான்தான் அங்கு ஜனாதிபதியாக இருப்பேன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடம்பிடித்ததால் தமிழீழத்தை தனியாக பிரிக்க முடியாமல் போய்விட்டது என்று இந்திய மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது. தற்போது கூட இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க 48 ஆயிரம் கோடி ரூபாவினை ஒதுக்கி 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
0 comments :
Post a Comment