ஏற்பாடுகள் தயார்!
வடக்கு,வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நாளை சனிக்கிழமை 21 ஆம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறவிருப்பதால் இதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பிவைக்கு நடவடிக்கை இன்று காலை முதல் நடைபெற்றது..
யாழ் மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து உரிய அதிகாரிகளின் பொறுப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுவதுடன் வாக்குப் பெட்டிகளினைக் கொண்டு செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
0 comments :
Post a Comment