Monday, September 2, 2013

சிரியா மீதான அமெரிக்காவின் உச்சக்ட்ட தாக்குதல் எப்போது? 9 ஆம் திகதிக்குள் தெரியவரும்!

சிரியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் திட்டத்தை பாராளுமன்ற ஒப்புதலுக்கு ஒபாமா அனுப்பினார். இந்த தீர்மானம் மீது 9 ஆம் திகதிக்குள் வாக்கெடுப்பு நடாத் தப்பட இருப்பதால் போர் பதற்றம் சற்று தணிந்திருக் கிறது.

சிரியாவில் புரட்சி நடத்துவோரை அதிபர் ஆசாத்தின் இராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி தலைநகர் டமாஸ்கஸ் அருகே ரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள் உள்பட 1429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. மனித உரிமைகளை மீறிய இந்த கொடூர அட்டூழியத்தை தடுக்க சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் முடிவு செய்தன. இதற்காக மத்திய தரைக்கடல் பகுதியில் போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு ஜெர்மனி ஆகிய நாடுகள் முழு ஆதரவை தெரிவித்தன. இங்கிலாந்து ஒதுங்கி கொண்டாலும் வேறு பல நாடுகளின் ஆதரவை ஒபாமா திரட்டி வருகிறார். சிரியா மீது இராணுவ தாக்குதல் தொடுப்பதில் ஒபாமா உறுதியாக இருக்கிறார். ஏவுகணைகளை வீசி குறைந்தபட்ச தாக்குதல் நிச்சயம் நடத்தப்படும் என தெரிகிறது.

அதே நேரத்தில் அமெரிக்கா குண்டு வீசினால் அதை முறியடிக்கும் விதமாக பதிலடி கொடுக்க சிரியா தயாராக உள்ளது. அதற்கு ஏற்ப இராணுவத்தை நிலை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் ஒபாமா நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய போதும் சிரியாவின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார். இரசாயன ஆயுதங்களை அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்திய ஆசாத் அரசாங்கத்துக்கு பாடம் புகட்ட வேண்டும். இதில் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது. எனவே இராணுவ தாக்குதல் நடத்தும் முடிவை எடுத்திருக்கிறேன்' என்று ஆவேசமாக பேசினார்.

அத்துடன் இந்த முடிவு மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். அதற்கு கட்சி பாகுபாடு கருதாமல் உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் தரவேண்டும். இதன் மூலம் நமது தேச ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி சிரியா மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் அளிக்கும் நகல் தீர்மானம் வெள்ளை மாளிகை சார்பில் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வைக்கு வைத்து ஆதரவு திரட்டப்படும். அதன் பிறகு ஓட்டெடுப்பு நடத்தி ஒப்புதல் வழங்கப்படும்.

இதுபற்றி செனட் சபை தலைவர் ஹார்ரி ரெயிட் கருத்து தெரிவிக்கையில், சிரியா அதிபர் ஆசாத் அப்பாவி மக்களுக்கு எதிராக அட்டூழியம் புரிந்திருக்கிறார். ஆகவே ராணுவ தாக்குதல் அவசியமும், நியாயமும் ஆகும். 9 ஆம் திகதிக்கு முன்னதாகவே அடுத்த வாரத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும்' என தெரிவிக்க்ப்படுகின்றது.

சிரியாவில் ரசாயன குண்டு வீசியதாக கூறப்படும் இடங்களில் இருந்து ஐநா நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துக் கொண்டு திரும்பினார்கள். இவை தற்போது ஐரோப்பிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்து பரிசோதிக்கிறார்கள். இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சவுதி அரேபிய, ஜப்பான் வெளியுறவு மந்திரிகளுடன் பேசி ஆதரவை திரட்டினார். சிரியா எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் அகமது அசி அல்-ஜார்பாவுடனும் ஜான் கெர்ரி தொடர்பு கொண்டு பேசினார்.

சிரியா மீதான போர் நடவடிக்கை குறித்து பிரான்சு நாட்டு மந்திரி மானுவேல் கூறுகையில், நாங்கள் தனியாக களம் இறங்க மாட்டோம். அமெரிக்க எடுக்கும் முடிவினை ஏற்று தோழமையுடன் செயல்படுவோம் என்றார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ஒபாமா முடிவை நான் ஆதரிக்கிறேன்' என்றார்.

1 comment:

  1. However the results would be unintended consequences.

    ReplyDelete