பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி 8000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பல்!
சவுதி அரேபிய அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அந்தநாட்டில் தங்கியிருந்த சுமார் 8000 இலங்கையர்கள் திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்காக சுமார் 10,000 பேருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளதுடன் இதுவரை நாடு திரும்பாத நிலையில் பலர் அங்கு தங்கியிருப்பதாகவும், அவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு இங்குள்ள அவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் பிரதிப் பொது முகாமையாளர் கூறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நவம்பர் மாதம் 3 ஆம் திகதியின் பின்னர் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள், சுதந்திரமாக நாடு திரும்புவதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்று சுட்டிக்காட்டியதுடன் பொதுமன்னிப்புக் காலத்தை பயன்படுத்தி நாடு திரும்புவோருக்கு விசேட விமான பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் கூடிய விரைவியல் நாடு திரும்பவேண்டும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment