அவுஸ்திரேலியா தொழிற்கட்சிக்கு விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம் $ 77000 ஆயிரம் வெள்ளி அன்பளிப்பு? - தேசியத் தலைவர்
அண்மையில் நடந்த அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தல் நிதிக்காக தொழிற்கட்சிக்கு, விக்ரோரியாவின் மூத்த தமிழ் அமைப்பான ஈழத்தமிழ்ச்சங்கம் 77 ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகளை வழங்கியிருப்பதாக Herald Sun பத்திரிகையின் ஆகஸ்ட் 23 ஆம் திகதிய இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.
விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம் இந்த நாட்டில் பல வருடங்களாக தமிழ் கலை, கலாசாரத்திற்காகவும் ஈழத்தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் இங்கு வந்து குடியேறிய தமிழ் அகதிகளுக்காகவும் இயங்கும் அமைப்பாகவே இதுவரைகாலமும் இயங்கிவந்ததாக அறிகின்றோம்.
வருடாந்தம் ஆண்டுப்பொதுக்கூட்டங்களை நடத்தி ஜனநாயக முறையில் செயற்குழு உறுப்பினர்களை தெரிவுசெய்துவரும் விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள் தரும் வருடாந்த உறுப்புரிமைப்பணம் (சந்தாப்பணம்) மற்றும் பொது நிகழ்ச்சிகளின் ஊடாக திரட்டப்படும் நிதியின் ஆதரவுடனேயே இயங்கிவருவதாகவும் நாம் அறிகின்றோம்.
ஆனால் இவ்வளவு பெருந்தொகையான பணம் (77 ஆயிரம் வெள்ளிகள்) இந்தச்சங்கத்திற்கு எங்கிருந்து வந்தது என்பதை சங்கம் பகிரங்கமாகத்தெரிவிக்குமா?
ஈழத்தில் போருக்குப்பின்னர் அங்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தேவைகளுக்கும் அவர்களின் புனர்வாழ்வுக்கும் வழங்கப்பட்டிருக்கவேண்டிய இந்த நிதியானது
இதுவரை காலமும் எங்கே இருந்தது? என்ற கேள்வி பிரதானமானது.
இது யாருடைய பணம்?
எங்கிருந்து வந்தது?
சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இதன் பின்னணியை விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம் தெளிவுபடுத்துமா?
நன்றி தேனி
0 comments :
Post a Comment