மும்பையில் அனர்த்தம்! 5 மாடிக் கட்டிடம் தரைமட்டம்!
இந்தியாவின் மும்பை நகரில் 5 மாடிகள் கொண்ட கட்டிட மொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
குடியிருப்பு கட்டிடமொன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்து ள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டிடம் முழுமையாக தரைமட்டமாகியுள்ளது. குறித்த கட்டிடம் மும்பை மாநகராட்சிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள வர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். 40 முதல் 50 வரையானோர் அனர்த்தத்தின் போது கட்டிடத் திற்குள் இருந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த சில மாதங்களில் மும்பை நகரத்தில் மாத்திரம் 5 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment