Monday, September 2, 2013

வடக்கில் இருந்து 5,000 தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவைக்கு விரைவில் இணைப்பு

வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்ளுமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்த கோரிக்கையை தொடர்ந்து முதற்கட்டமாக 5,000 தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து விரைவில் வட மாகாணத்தில் முதற்கட்டமாக 5,000 தமிழ் பொலிஸாருக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

எனவே அதனை வேலை வாய்ப்பாக மட்டும் கருதாமல் தமிழ் மொழி மூலமாக எமது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதற்கும், உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்கின்ற அசெளகரியங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை எமது இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com