வகவம் கவிஞர்களின் ஒன்றுகூடல் நாளை பிற்பகல் 4 மணிக்கு...!
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) கவிஞர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நாளை (27) வெள்ளி பிற்பகல் 4 மணிக்கு கொம்பனித்தெரு முஸ்லிம் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கிறது.
துபாய் சங்கமம் தொலைக்காட்சியின் பணிப்பாளர் கலையன்பன் ரபீக் சிறப்பதிதியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் வலம்புரி கவிதாவட்ட ஸ்தாபக உறுப்பிர்களுடன் தமிழ்க் கவிஞர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வலம்புரி கவிதாவட்ட ஸ்தாபகத் தலைவர் கவிஞர் தாஸிம் அகமது தலைமையில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
0 comments :
Post a Comment