மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்!! 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது!
டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக 23 வயது மருத் துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மருத்துவ மாணவி வழக்கில் குற்றவாளிகளின் குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டது. மாணவி பாலியல் பலாத்கார வழக் கில், புதன் அன்று டெல்லி சாகெட் விரைவு நீதிமன்றத்தில் இறுதி வாதம் பிரதி வாதம் நடந்தது.
இதில் வாதாடிய மாணவியின் தரப்பு வழக்கறிஞர், கல்லூரி மாணவியை மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் ஊடகங்கள் தான் பெரிதாக்கிவிட்டன என கூறி தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் குற்றவாளிகள் தரப்பில் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க கூடாது என்றும், அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரே மாதிரியான தண்டனை என்பதை ஏற்க முடியாது என குற்றவாளிகள் தரப்பில் வாதம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு குறித்த விவாதம் இரு தரப்பிலும் நீடித்ததால், நீதிபதி குற்றவாளி களுக்கான தண்டனையை அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தார். மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று(13.09.2013) அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததை அடுத்து, டெல்லியில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரியில் வழக்கின் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் டெல்லி திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment