47 மில்லியன் ரூபா செலவில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு காணி கொள்வனவு!
யாழ் பல்கலைக்கழகத்திற்கு காணியொன்றை கொள்வனவு செய்வதற்கு 47 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தை தரமுயர்த்த தேவையான அத்தி யவசிய திட்டங்களை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க சமர்பித்த யோசனைக்கேற்ப யாழ்ப்பாணம் சல்லிகந்தவத்த எனும் 4 ஆயிரத்து 474 ஏக்கர் பரப்பளவை கொண்ட தனயிhர் காணியொன்று 47 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டது.
சட்டபீடத்திற்கு தேவையான விரிவுரை மண்டபம் உட்பட ஏனைய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படும். அத்துடன் துணை வேந்தருக்கான உத்தியோகபூர்வ இல்லமும், ஏனைய அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களும் நிர்மாணிக்கப்பட வுள்ளன.
0 comments :
Post a Comment