திவிதுர தமிழ் வித்தியாலயத்திற்கு 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டடத் தொகுதி கையளிப்பு
வெலிவிட்டிய திவிதுர கல்வி வலயத்தில் உள்ள திவிதுர தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான கணணி மற்றும் மனையியல் கூடம் அடங்கலன கட்டிடத் தொகுதியினை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் வைபவம் மீள் குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரக்கோன் தலைமையில் நடைபெற்றது.
பிரதேசத்தில் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான இதில் முதலாம்தரம் முதல் சாதாரணதரம் வரை சுமார் 400 மாணவர்களுக்கு மேல் கல்வி பயில்கின்றனர். இப்புதிய கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக 3.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலை பேண்ட் வாத்தியகுழுவினருக்காக 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பேண்ட் வாத்தியக் கருவிகளும் இவ்வைபவத்தின்போது அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.
இப்பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற இவ்வளங்களானது மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய பங்களிப்புச் செய்யும் என்பதுடன் இந்த வசதியை மாணவர்கள் உரியமுறையில் பயன்படுத்தி கல்வித்துறையில் முன்னேற்றமடைய வேண்டுமென இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியஅமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தென்மாகாண கல்வியமைச்சர் சந்திமா ராசபுத்திர,மாகாண சபை உறுப்பினர் லசந்த விஜயநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment