நாளை முதல் ரெலிமெய்ல் (தொலைவஞ்சல்) சேவை! ஒன்று ரூபா 30 மட்டுமே!!
பல ஆண்டுகளாக இலங்கைத் தபால் திணைக்களம் நடை முறைப்படுத்திவந்த தந்திச் சேவைக்குப் பதிலாக புதிதாக ரெலிமெய்ல் (தொலைவஞ்சல்) சேவை நாளை (01) திகதி முதல் சகல தபாலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபயரத்ன தெரி வித்தார்.
தந்திச் சேவைக்கு இணையான ரெலிமெய்ல் சேவைக்கு அரசாங்கத்தின் வரவேற்பு கிடைக்கவுள்ளதுடன், நாளை முதலாம் திகதி முதல் பிரதான தபாலகங்கள் மற்றும் உபதபாலகங்கள் 3600 இல் இச்சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு ரெலிமெய்ல் (தொலைவஞ்சல்) செய்தி அனுப்பும் போது, முதல் 10 சொற் களுக்கு ரூபா 30 அறவிடப்படவுள்ளதுடன், மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூபா. 1.50 வீதம் அறவிடப்படும்.
தகவல் கிடைத்து 4 மணித்தியாலயங்களுள் குறித்த நபருக்கு செய்தி பரிமாற ப்படும். அதுபற்றி தகவல் வழங்குநர் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்காக ரூபா 10 அறவிடப்படும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிடுகிறது.
தந்திச் சேவையில் முகவரிக்கும் கட்டணம் அறவிடப்பட்டது. என்றாலும் இந்த தொலைவஞ்சல் சேவையில் முகவரிக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என தபால் மா அதிபர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment