26.1வீதத்தால் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இந்தவருடம் நாட்டுக்கு வருகை தந்துள்ள உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 26.1 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை உல்லாசப்பிரயாணத்துறை அபிவிருத்தி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகைத்தந்த வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை 79,256 ஆக காணப்பட்டதாகவும் அத்தொகை இந்தவருடம் ஆகஸ்ட் மாதத்தில் 100,224 ஆக அதிகரித்துள்ளது இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.3 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் கடந்த ஆண்டை விட இந்த வருடம் இந்தியா, ஜேர்மனி, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தரும் உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துள்ளமையே காரணம் என உல்லாசப்பயணத்துறை அபிவிருத்தி அலுவலகம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment