எல்.ரி.ரி.ஈ. யின் மன்னார் மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் ரொபேர்ட் தலைமையிலான 25 பேர் அரசுடன் இணைவு
எல்.ரி.ரி.ஈயின் மன்னார் மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் ஏரம்பமூர்த்தி சிவானந்தராஜா (ரொபேர்ட்) தலைமையிலான 25 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அரசாங்கத்தில் இணைந்துகொண்டனர்.
ஐ.ம.சு.மு தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் போதே இவர்கள் அரசில் இணைந்துகொண்டனர்.
இதன்போது மாந்தை பிரதேச சபை உறுப்பினர் ரைபீர், மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அரபாத் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டதோடு, இவர்களை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
0 comments :
Post a Comment