ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 24 ஆவது அமர்வு இன்று! இலங்கை தொடர்பாக பேசப்படுமா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 24 ஆவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள குறித்த அமர்வில் பற்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 4 பேர் அடங்கிய குழுவொன்று பயணமாகியுள்ளது.
ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியவன்ச, குறித்த இலங்கைக் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமர்வில் உயர்மட்டக்குழுவொன்று பங்கேற்குமெனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் செப்டெம்பர் 25 ம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணை யாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை குறித்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்க வுள்ளார். அது தொடர்பில் விரிவான அறிக்கை, அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment